விக்ரமை நொங்கெடுக்கும் ஷங்கர்

26

அந்நியன் படத்தையடுத்து ஷங்கர்-விக்ரம் கூட்டணி சேர்ந்துள்ள படம் ஐ. இந்த படத்தின் படப்பிடிப்பு உள்நாடு, வெளிநாடு என்று பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடிக்கும் விக்ரமை அடிக்கடி உடல்கட்டை ஏற்றி இறக்கச்சொல்லி நொங்கெடுத்து வருகிறார் ஷங்கர்.

அதிலும் ஆரம்பத்தில் விக்ரமின் உடல் எடையை அதிகரிக்க வைத்து படமாக்கிய ஷங்கர், இப்போது அவரை 85 வயது முதியவராக மாற்றி வருகிறாராம். இதுவரை பட்ட கஷ்டத்தைவிட இந்த கெட்டப்புக்காகத்தான் படாத கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறாராம் விக்ரம். வழக்கமான சாப்பாடு என்பதை மறந்து ஏதோ இலைதழைகளை சாப்பிட்டபடி தனது உடம்பை இளைக்க வைத்து எலும்பும் தோலுமாக மாறி விட்டாராம்.

ஆனால், இந்த கெட்டப் வெளியில் தெரிந்தால் படத்தில் இருக்கிற சுவராஸ்யம் போய்விடும் என்பதால், இந்த கெட்டப்போடு வெளியில் எங்கேயும் தலைகாட்டக்கூடாது என்று விக்ரமுக்கு கண்டிசன் போட்டுள்ளார் ஷங்கர். அதனால், படப்பிடிப்பு இல்லையென்றால் வீடே கதியென்று இருக்கும் விக்ரம், பெரும்பாலான நேரங்களை தனது வீட்டில் உள்ள ஜிம்மில்தான் கழிக்கிறாராம்.