யாரோ இவன் யாரோ இவன் – உதயம் NH4

32
யாரோ இவன்
யாரோ இவன்
படம்                 : உதயம் NH4
பாடல் வரிகள்   : நா . முத்து குமார்
பாடியவர்கள்     : ஜீ வீ  பிரகாஷ் குமார் & சைந்தவி
இசை                  : ஜீ வீ  பிரகாஷ் குமார்
 
யாரோ இவன், யாரோ இவன்…
என்  பூக்களின் வேரோ  இவன்…
என் பெண்மையை  வென்றான் இவன் …
அன்பானவன்……
யாரோ இவன், யாரோ இவன்…
என்  பூக்களின் வேரோ  இவன்…
என் பெண்மையை  வென்றான் இவன் …
அன்பானவன்……
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உடைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்….
என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்….
எங்கே உனை  கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே…
ஏன் இன்று இடைவெளி குறைகின்றதே….
மெதுவாக இதயங்கள் இணைகின்றதே…
என் கை விரல்
உன் கை விரல் கேட்கின்றதே ….
யாரோ இவன், யாரோ இவன்…
என்  பூக்களின் வேரோ  இவன்…
என் பெண்மையை  வென்றான் இவன் …
அன்பானவன்……
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தூக்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ….
நதியினில் ஒரு இலை விழுகின்றதே…
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…
கரை சேருமா….
உன் கை சேருமா…
எதிர்காலமே…
எனக்காகவே பிறந்தான் இவன்
எனக்காகவே வருவான் இவன்
என் பெண்மையை  வென்றான் இவன் …
அன்பானவன்……
என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்….