மூக்கடைப்பு குறைய‌ – 2

19

மூக்கடைப்பு குறைய‌-2

திப்பிலி, கஸ்தூ‌ரி மஞ்சள், சந்தனம் மற்றும் படிகாரம் ஆகியவற்றை பசும்பால், இளநீர் விட்டு தனித்தனியாக முறைப்படி ஊற வைத்து அரைத்து ஒன்றாக கலந்து உருண்டையாக்கி காய வைத்து இடித்து சலித்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, மூக்கெரிச்சல் குறையும்.

அறிகுறிகள்:

 • மூக்கடைப்பு.
 • மூக்கெரிச்சல்.

தேவையான பொருள்கள்:

 1. திப்பிலி = 50 கிராம்
 2. கஸ்தூ‌ரி மஞ்சள் = 25 கிராம்
 3. சந்தனம் = 25 கிராம்
 4. படிகாரம் = 5 கிராம்

செய்முறை:

 • திப்பிலியை மண் பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி ‌‌நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து கொள்ளவும்.
 • கஸ்தூ‌ரி மஞ்சளை ஒன்றிர‌ண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து வைத்து கொள்ளவும்.
 • சந்தனத்தை உரைத்து கொள்ளவும். படிகாரத்தை சிறிது இளநீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
 • அரைத்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கூட்டி மீண்டும் அரைத்து உருண்டைகளாக செய்து மண் தட்டில் வைத்து நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் மாவு போல இடித்து சலித்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

 • இந்த மருந்தை துணியில் சிறிய முடிச்சாக கட்டி முகர்ந்து பார்க்கவும். முடிச்சாக கட்டாமலும் சிறிது மருந்தை கையில் எடுத்து முகர்ந்து பார்க்கலாம். இவ்வாறு தொடர்ந்து இந்த மருந்தை முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு, மூக்கெரிச்சல் குறையும்.