மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

20

காரம் என்றால்
அனைவருக்கும்
ஞாபகம்
வருவது மிளகாய்
தான்.
அப்படிப்பட்ட மிளகாயை பலர்
விரும்புவதில்லை, முக்கியமாக
குழந்தைகள்.
ஆனால் காரசாரமாக உண்ணும்
இன்னும்
சிலரோ மிளகாயை விரும்பி
உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
அதையும்
மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும்
தெரிவதில்லை.
இதயக்குருதி குழாய் நோய்களின்
இடர்பாடு குறையும்
கொலஸ்ட்ரால் மற்றும்
ட்ரைக்ளிசரைடு அளவுகளை
குறைப்பதோடு மட்டுமல்லாமல்,
ஆபத்தான இரத்த
உறைதலை உண்டாக்கும் இரத்தக்
கட்டிகளை குறைக்கும்.
இதயக்குருதி குழாய் நோய்கள்
வருபவர்களும் சரி,
ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி,
மேற்கூறிய உடல்நல பயன்கள்
மிகவும் முக்கியமானவையாக
கருதப்படுகிறது.
அழற்சி குறையும்
மிளகாய் உண்ணுவதால் ஏற்படும்
மற்றொரு மிக முக்கியமான உடல்நல
பயன், அழற்சி குறையும்.
முக்கியமாக கீல்வாதம்
உள்ளவர்களுக்கு இது பெரிய
நிவாரணியாக விளங்கும். மேலும்
மிளகாய் என்பது உடலில்
ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும்
உதவுகிறது.
மிளகாயில் அதிக
அளவு காப்சைசின் உள்ள
காரணத்தினால் தான் மேற்கூறிய
உடல்நல பயனை பெற முடிகிறது.
மேலும் இன்று அதிக அளவில்
காப்சைசின் நிறைந்துள்ள க்ரீம்கள்
சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம்,
முதுகு வலி மற்றும் இதர
வலிகளுக்கும்
அவை பயன்படுகிறது.
மேம்பட்ட செரிமானம்
வயிற்றில் அல்சர் அல்லது அமில
எதிர்பாயலால் அவதிப்படுபவர்கள்
மிளகாயை தவிர்க்க வேண்டும்
என்று காலாகாலமாக செவிலியர்கள்,
மருத்துவர்கள் மற்றும் உடல்நல
வல்லுனர்களும்
அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் மிளகாயில் அதிக அளவில்
உள்ள கயேன் என்ற பொருள்,
வயிற்றில் ஏற்படும்
அல்சரை குறைக்கும்
என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில்
கண்டுபிடித்துள்ளனர்.
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
சுரப்பதற்கு பெரிய உதவியாக
விளங்குகிறது கயேன்.
அதனால்
செரிமானத்திற்கு மட்டுமல்லாமல்,
அல்சரால் ஏற்படும்
வயிற்று வலியையும் குறைக்கும்.
மேலும் வாய்வு மற்றும்
வயிற்று பொருமலை குறைக்கவும்
கயேன் பெரிதும் உதவி புரிகிறது.
எலும்பு வளர்ச்சிக்கு துணை
புரியும்
மிளகாயில் அதிக
அளவு கால்சியம்
உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம்
என்பது திடமான பற்களுக்கும்
எலும்புகளுக்கும் தேவைப்படும்.
சிலருக்கு பால் பொருட்கள் என்றால்
அலர்ஜியாக இருக்கலாம். அதனால்
அதை பருகாதவர்கள், அதிக
கால்சியம் உள்ள
மிளகாயை உண்ணலாம்.
பால் பொருட்கள்
அளிப்பதை போலவே, மிளகாயும்
சம அளவிலான
கால்சியத்தை கொடுப்பதால்,
திடமான பற்களையும்
எலும்புகளையும் பெறலாம்.
இரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவை குறைக்கும்
உடல் பருமன்
பிரச்சனை உள்ளவர்களுக்கும்,
சர்க்கரை நோயால்
அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய்
உட்கொள்ளுதல் நல்ல
விளைவுகளை ஏற்படுத்தும்
என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை
சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று
தெரிவித்துள்ளது.
அவர்களின்
ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம்
ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப்
க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற
பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.
வாதத்திலிருந்து பாதுகாப்பு
உடம்பில் உள்ள இரத்த
ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக
இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில்
மிளகாய் முக்கிய
பங்கு வகிக்கிறது.
அதனால் தான் என்னவோ,
இது மிகப்பெரிய இரத்த ஓட்ட
செயலூக்கியாக பார்க்கப்படுகிறது.
அதற்கு தினமும் உங்கள்
உணவோடு சேர்த்து மிளகாயை
உட்கொண்டாலே போதுமானது,
உங்களுக்கு பலதரப்பட்ட
நன்மைகளும் உடல்நல பயன்களும்
கிடைத்துவிடும்.
வலி நிவாரணி மற்றும்
அழற்சி குறைதல்
காப்சைசினில் நியூரோபெப்டைட்
என்ற அழற்சியை குறைக்கும்
பொருள் உள்ளது. அதனால் கீல்வாதம்
மற்றும் முடக்கு வாதம் போன்ற
அழற்சிகளால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகாய்
பெரிய நிவாரணியாக
விளங்குகிறது.
அதிலும் அது உடலில் உள்ள
பிளாஸ்மா புரதத்தில், அதன்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொழுப்பை குறைக்கவும் உதவும்
மிளகாயில் இருந்து வெளிப்படும்
வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும்
அளவை அதிகரித்து,
கொழுப்புகளை கரைக்க
உதவுகிறது என்று
ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.