மாதவிடாய் கோளாறுகள் குறைய -II

3

வாழைப்பூவை பொடியாக நறுக்கி அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, கொத்தமல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றை இடித்துப் போட்டு தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.

அறிகுறிகள்:

  • வயிற்று வலி.
  • மாதவிடாய் கோளாறுகள்.
  • மாதவிலக்கு சீரற்ற தன்மை.

தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பூ.
  2. இஞ்சி.
  3. வெள்ளைப் பூண்டு.
  4. சீரகம்.
  5. சோம்பு.
  6. கொத்தமல்லி விதை.
  7. கறிவேப்பிலை.

செய்முறை:
வாழைப்பூவை இரண்டு அல்லது மூன்று இதழ்களை எடுத்து விட்டு பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய வாழைப் பூவுடன் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, சீரகம், சோம்பு, கொத்தமல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றை நன்கு இடித்துப் போட்டு தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.