மனித அறிவியலை ‘துச்சமாக’ கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!

25
சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய 7 நடவடிக்கைகள்
சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய 7 நடவடிக்கைகள்

மனித அறிவியலை ‘துச்சமாக’ கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!

ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும், இவ்வளவு நீர் குடிக்க வேண்டும், சராசரியாக உடல் வெப்பம் இவ்வளவு இருக்க வேண்டும் – போன்றவைகளைத் தான் நாம் ‘ஹுமன் சயின்ஸ்’ அதாவது மனித அறிவியல் என்கிறோம்..!
அப்படியான மிகவும் அத்தியாவசியமான மனித அறிவியலை ‘துச்சமாக’ நினைக்கும் மிகவும் அசாதாரணமான சக்திகளை கொண்ட 11 மனிதர்களை நாம் இங்கே சந்திக்க இருக்கின்றோம்..!

11. டேனியல் டாம்மெட் :
5 மணி நேரம் 9 நிமிடங்களில் சுமார் 22,414 தசம எண்களை எந்த விதமான பிழையும் இன்றி நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.

10. நடாஷா தெம்கீனா :
எக்ஸ் ரே கண்கள் கொண்டவர், அதாவது மனித சதையை ஊடுருவி காணும் சக்தி கொண்டவர்.

09. திபெத்திய துறவிகள் :
மனதை பயன்படுத்தி உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டவர்கள்.

08. ந்காக் தாய் :
1973-ஆம் ஆண்டு மோசமான உடல் நிலை பிரச்சனைக்கு பிறகு இவரால் இன்று வரை தூங்க முடியவில்லை.

07. ஸ்டீபன் வில்ட்ஷிரே :
அசாத்தியமான போட்டோகிராபிக் மனம் கொண்டவர். ஒரு பொருளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் கூட அதை மிக துல்லியமாக வரையக்கூடியவர்.

06. டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித் :
இவரை போல் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட மனிதர் உலகில் இல்லை..!

05. பென் அண்டர்வூட் :
சோனார் விஷன் கொண்டவர் அதாவது கண்களை பயன்படுத்தாமல் கூட இவரால் காட்சிகளை காண முடியும்..!

04. கெவின் ரீச்சார்ட்சன் :
லயன் விஸ்ப்பரர் எனப்படும் இவர் கொடூரமான காட்டு விலங்ககான சிங்கங்களை, மிகவும் எளிமையாக தன் வழிக்கு கொண்டு வந்துவிடும் சக்தி கொண்டவர்..!

03. இராதாகிருஷ்ணன் வேலு :
ஏழு ரயில் பெட்டிகளை பற்களால் கடித்து இழுக்கும் சக்தி கொண்டவர்.

02. ப்ராலத் ஜனி :
1940-ல் இருந்து உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்பவர்.

01. விம் ஹொஃப் ஏ.கே.ஏ :
இரண்டு மணி நேரம் உறைபனியில் மூழ்கி இருந்தாலும் கூட உடல் வெப்பத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே உருவாகும் உடலமைப்பு கொண்டவர்.