புற்றுநோயை போக்கும். நாக்கு புண், கன்னத்தில் ஏற்படும் புண்கள், அல்சரை ஆற்றும்

12
சிவனார் வேம்பு
சிவனார் வேம்பு

சிவனார் வேம்பு சாலையோரங்களில் கிடைக்க கூடியது. இதன் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும். சிவனார் வேம்புவின் காய்களானது கடுகு காய்களை போன்றது. குறுஞ்செடியான இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்திலும், காய்கள் கொத்து கொத்தாக இருக்கும். சிவனார் வேம்பு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

தோல்நோயை போக்கும். புற்றுநோயை தடுக்க கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். வலியை போக்க கூடியது. காய்ச்சலை குணமாக்கும். சிவனார் வேம்புவை பயன்படுத்தி தோல் நோய்க்கான உள்மருந்து தயாரிக்கலாம்.

சிவனார் வேம்புவை துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் பரங்கிபட்டை சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பால் சேர்த்து குடிக்கலாம்.

இது தோல் வியாதிகள், வலி மற்றும் வீக்கத்துக்கான மருந்தாகிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.  ஹெபடிட்டிஸ் பி, சி சரியாகிறது. நச்சுக்களை வெளித்தளுக்கிறது.

தோல்நோய்கள் எதுவாக இருந்தாலும் குணப்படுத்த கூடியது. சொரியாஸ் குணமாகும். ஈரலை பாதுகாக்க கூடியது. சிவனார் வேம்புவின் வேரை பயன்படுத்தி பல் வலி மற்றும் தாடைகளில் புண்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

வேரை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது உப்பு, நீர் விட்டு கொதிக்க வைத்து பருகலாம்.இது ஈறுகளில் ஏற்படும் தொற்று, வீக்கத்தை போக்கும். இருவேளை குடித்து வந்தால், வாயில் உள்ள புண்கள் ஆறும். உள் உறுப்புகளை தூண்டும். வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். தாடையில் ஏற்படும் புண்கள் சரியாகும்.

சிவனார் வேம்பு வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை போக்க கூடியது. புற்றுநோயை போக்கும். நாக்கு புண், கன்னத்தில் ஏற்படும் புண்கள், அல்சரை ஆற்றும்.

சிவனார் வேம்புவை பயன்படுத்தி தோல் வியாதிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். சிவனார் வேம்புவின் வேர் மற்றும் இலைகள் சேர்ந்த பொடி எடுத்துக்கொள்ளவும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனுடன் அருகம்புல், தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ளவும். கட்டிகள், புண்கள் மீது பூசினால் அவைகள் விரைவில் ஆறும்.

தைலத்தை பூசும்போது சொரி, சிரங்கு, படை சரியாகும். தொழுநோய் புண்கள், நாள்பட்ட அழுகிய புண்கள், சிலந்தி கட்டிகளுக்கு மருந்தாகிறது. சிவனார் வேம்புவுக்கு இறையனார் வேம்பு என்ற பெயரும் உள்ளது. இதன் இலைகள் தோல்நோய்க்கு மருந்தாகிறது.

உள்மருந்தாக பயன்படுத்தும்போது ஈரல் பலப்படும். சர்க்கரை நோயை தணிக்க கூடியது. வலி வீக்கத்தை குறைப்பதுடன், ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது