புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை

37

திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனை வரும் விரும்பி உண்ணக் கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து  எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ்,  பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில்  உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்த தாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதி பெறவும், பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு உடல்பலம் வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு  காய்ச்சி அருந்தச் செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். உலர் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள  சிவப் பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.