புதுப்படங்களில் நோ கமிட்மெண்ட்: அனுஷ்கா

101

தமிழ், தெலுங்கு படங்களில் தற்போது நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா.

செல்வராகவன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இரண்டாம்  உலகம்.

இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா, தெலுங்கில் வேறு ருத்தரமா தேவி, பாகுபலி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் டைட் ஷெடியூலில் இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை தமிழ் மற்றும் தெலுங்கில் புது படங்களுக்கு கமிட் ஆவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளாராம் அனுஷ்கா.

இந்த இரு படங்களும் தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.