பல்வகைப் பாடல்கள்3. தனிப் பாடல்கள் 17. பிழைத்த தென்னந் தோப்பு |
||
வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ? சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்; தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா! இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்; நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன், வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்; |