28. நவராத்திரிப் பாட்டு

தெய்வப் பாடல்கள்

28. நவராத்திரிப் பாட்டு

(உஜ்ஜயினீ)

 

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி                                     (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா.                                                  (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம்,                                    (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி.                                (உஜ்ஜயினீ)