பாண்டிய நாடுக்காக பாடிய ரம்யா

66

பாண்டிய நாடு படத்திற்காக பாடல் ஒன்றினை பாடியுள்ளார் ரம்யா நம்பீசன்.

குள்ளநரி கூட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா.

அதனைத் தொடர்ந்து  பீசா  படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நான்கு மொழி படங்களிலும் நடித்து வரும் அவர் மலையாளத்தில் சில படங்களில் பாடியிருக்கிறார்.

இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் பாண்டிய நாடு படத்தில் இமான் இசையில் ‘பை பை கலாச்சி பை’ என்ற பாடலை ரம்யா பாடியுள்ளார்.

தமிழில் முதல்முறையாக பாடியிருக்கும் அவர், தொடர்ந்து பாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்