படப்பிடிப்பில் ஸ்ருதியோடு பிரபுதேவா மோதல்!!

22

பிரபுதேவா ஹிந்தியில் ‘ராமய்யா வத்சவய்யா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழிலும், தெலுங்கிலும் வெளி வந்து வெற்றிப்படமான, ‘சம்திங் சம்திங்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் கிரீஷ் நாயகனாகவும், ஸ்ருதி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது, பிரபுதேவா சொல்லிக் கொடுத்த நடனத்தை ஸ்ருதி சரியாக செய்யவில்லையாம். இதனால் ஸ்ருதியை பிரபுதேவா கண்டித்ததற்கு, பதிலுக்கு பதில் பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இருவருக்கும் இடையில் அப்போது உருவான மனஸ்தாபம் இன்னும் தொடர்கிறதாம். இந்நிலையில் ராமைய்யா வத்சாவய்யா வரும் 19ம் திகதி வெளியாகவுள்ளது. படத்திற்கான புரமோஷன் வேலைகள் எதிலுமே, ஸ்ருதி பங்கு கொள்வதில்லையாம்.

அதனால், பிரபுதேவா சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டிய ஜாக்குலினை வைத்து மீதமுள்ள வேலைகளை முடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.