நண்பர்கள் தினம் கவிதை

790

“நண்பர்கள் தினம்…”

நண்பர்களே..,

கைகோர்த்து வாருங்கள்
வேறொரு கிரகத்தில்
குடிபெயர்வோம்-ஏனெனில்
அங்கே “காலண்டர்” கிடையாதாம்… 2

காலம்,
நம்மையெல்லாம்
இடம்மாற்றி திசைமாற்றி
எங்கோ இழுத்தாலும்

நட்பின் பிறப்பிடமே
உன்னைவிட்டு பிரிவேனோ..?
பிரிவு என்பது வாழ்வின் அங்கம்
துணிவு கொண்டு சந்திப்போம்…

பிரியும் வேளையில் கண்ணீர் வேண்டும்
அதுதானே நட்பின் சின்னம்… Fri_7

எதிர்பார்ப்பே வாழ்க்கை
ஏமாற்றம் இயற்கையின் சீற்றம்

எதிர்பார்ப்போம்
நமது நட்பு நீடிக்கும்படி…

நாம் சந்திக்கும்
நாட்கலெல்லாமே- நமக்கு
நண்பர்கள் தினம்தான் …

மீண்டும் நாம்
சந்திக்கும் நாள் எதுவோ,

ஆவலாய் இருக்கிறது
அந்த இனிய நாள் நாளைவர
காத்திருப்போம்…

” நண்பர்கள் தின வாழ்த்துகள் …”