தினந்தோறும் அமோகாவை காதலிக்கும் வாலிபர்கள்

19
ஜே. ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமோகா.
அப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது படத்தின் ஒரு படப்பாடல்களில் நடனம் ஆடுவதில் தனது கவனத்தை திருப்பி வருகிறார்.
ஜே.ஜே படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி திரையுலகிற்கு தனது பயணத்தை தொடர்ந்தார்.
இந்தித் திரையுலகில் தனது பெயரை நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக்கொண்டார். அவ்வப்போது தமிழ் படங்களில் ஒரு பட பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.
தற்போது படம் பேசும் என்ற படத்தில் ஒரு படப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிக்கொண்டிருந்த அமோகா ஆட்டத்தின் ஓய்வின் போது ஊடகத்தினரை சந்தித்தார்.
அப்போது திரையுலக அனுபவம் குறித்து அவர் கூறுகையில், என்னுடைய உண்மையான பெயர் பிரியங்கா கோத்தாரி அந்தப் பெயரிலேயயே திரையுலயில் சாதிக்க விரும்புகிறேன்.
ஜே. ஜே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான போது எனக்கு புதுமையான அனுபவம் கிடைத்தது.
ஆனால் அப்படத்திற்கு பின்பு சரியான வாய்ப்புகள் அமையாததால் தமிழில் கவனம் செலுத்தாமல் பாலிவுட் பட வாய்ப்புக்காக மும்பை திரையுலகில் அடியெடுத்து வைத்தேன்.
இதுவரை தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னட மொழிகளில் 20 படங்களில் நடித்துள்ளதால் இனி தமிழை மிஸ் பண்ணாமல் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.
தமிழில் ஒரு படப் பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புகள் வந்தன. முதலில் இவ்வாய்ப்பினை ஏற்பதற்கு தயங்கினேன் பின்பு ஒரு படத்தின் மூலம் நம் ரசிகர்களை மிஸ் பண்ணினாலும் ஒரு படப் பாடலின் மூலம் அவர்களின் மனதை கவர்ந்து விடலாம் என்று ஒத்துக்கொண்டேன்.
மேலும் தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிமுகம் எனக்கு இல்லாததால் தேடிப்போய் எந்த வாய்ப்புகளையும் கேட்டதில்லை.
இதுவரை தேடிவந்த வாய்ப்புகளையே ஏற்று நடித்துள்ளேன். ஆனால் தமிழில் பாவாடை தாவணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதால் அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
அதற்காக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று இல்லை, சினிமாவிற்குள் வந்தால் கிளாமரும் கொஞ்சம் காட்ட வேண்டியது அவசியமாகும்.
இதனைத்தொடர்ந்து தமிழில் ரஜினி சாருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்றும் அஜித், சூர்யா, மற்றும் விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.
மேலும், திரையுலகில் அதிகம் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது என்றும் அதற்கான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறினார்.
கிசுகிசுக்கள் குறித்து கூறுகையில், தினம் யாரவது ஒருத்தர் எனக்கு லவ் சொல்லிட்டு தான் இருக்காங்க, அப்படி யாரும் சொல்லலேன்னு சொன்னாதான் அது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி.
ஆனா எனக்கு பிடிச்ச ஒரு ஸ்பெஷல் ஆள் இன்னும் கிடைக்கல. மும்பையில நிறைய பேர் சொல்லிட்டாங்க, லவ் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியம்னு நினைக்கி‌றேன்.
என் திருமணத்தை பெற்றோர் முடிவு செய்தால் கூட, திருமணத்துக்கு முன்னாடியே பார்த்து பேசி பழகி ஒருவரை ஒருவர் புரிஞ்சிட்ட அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றார்.
இந்நிலையில் தனது எதிர்காலத் திட்டம் குறித்து கூறுகையில், தற்போதைய வாழ்க்கையில் தனது குடும்பத்தார் மற்றும் வேலைகளில் என்னை சந்தோஷப்படுத்தி கொள்வதால் எதிர்காலத் திட்டம் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஒரு கால கட்டத்தில் திருமணத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு வாழ விரும்புகிறேன் என்றும் ஆனால் அதற்கு இன்னும் நிறைய காலங்கள் உண்டு எனவும் கூறினார்