தன் பிணத்தைத் தான் தொட்டுப் பார்க்கையில்

13

உச்சியில்
சமாதானக் கொடியை
உயர்த்தியாயிற்று

வரிவரியாய் ஒப்பந்தம் முகத்தில்
வரைந்தாயிற்று

சுவாசப் பையை
ஒப்படைத்துவிட்டு மூச்சு
வெளியேற
நாள் குறித்தாயிற்று.

மரணத்திடம்
சரணடையும் முன் ஒரு விருப்பம்
அவனுக்கு…

வளர்ச்சியை முன்னேற்றத்தை
வளைத்துப்போட்ட
அவனுக்குத்
தான்
விலக்கிவைத்த வாழ்க்கையிடம்
ஒரு தடவை
பேசிவிட்டு வரவேண்டும்…

உலராத
இரத்தத்துடன் கிடக்கும்

நேற்றுகளை
விலக்கிக்கொண்டே ஓடினான்…