சிவகார்த்திகேயன் ஹன்சிகா இணையும் ‘மான்கராத்தே’

11

சிங்கம் 2′ ரிலீஸிற்குத் தயாராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து கார்த்தியுடன் ‘பிரியாணி’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார்.
ஒருவழியாக சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரிடம் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருந்து வரும் திருக்குமரன் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.
‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த போதும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை என்றவுடன் உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்திற்கு ‘மான்கராத்தே’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகாதஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் – ஹன்சிகா – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு கோலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறதாம்.