சிவகார்த்திகேயனுடன் நடிக்காதே – ஹன்சிகாவுக்கு சிம்பு போட்ட கட்டளை

10
சென்னை பாண்டி பஜாரில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில் புது வீடு கட்டியிருக்கிறார் சிம்பு. தனது சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடல்லவா? கடந்த வாரம் மட்டற்ற மகிழ்ச்சியோடு இந்த புதுமனை புகுவிழாவை நடத்தியிருக்கிறார்.
தனது குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு ஒருவருக்கும் சொல்லப்படவில்லையாம்.
ஆனால் தெருவாசிகள் அனைவரும் ஹன்சிகா மோத்வானி வருவார், சிம்புவுக்கு எதிரியாக இருந்தாலும் தனுஷ் வருவார் என்றெல்லாம் ஆவலோடு புதுவீட்டை நோட்டமிட, சிம்பு பேமிலி மட்டும் பால் பாயாசத்தை காய்ச்சி குடித்துவிட்டு கிளம்பிவிட்டது. இருந்தாலும் ரகசியமாக ஒரு நாள் ஹன்சிகா வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேர்வதாக ஒரு செய்தி பரவியது அல்லவா? அந்த செய்திக்கும் ஆபத்து வந்து சேரும் போலிருக்கிறது.
ஹன்சிகாவிடம் இது குறித்து பேசிய சிம்பு, சிவகார்த்திகேயனுடன் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். காதல் பெரிதா, தொழில் பெரிதா என்பதை ஹன்சிகாதான் முடிவு செய்ய வேண்டும் இனிமேல்!