சித்தார்த் பெற்றோரை சந்தித்த சமந்தா: திருமண ஏற்பாடுகள் தீவிரம்

15
சித்தார்த்-சமந்தா திருமண ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனால் இதுவரை வதந்தியாகவே இருந்து வந்த சித்தார்த் சமந்தா காதல் இப்போது உறுதியாகிவிட்டது.
சமந்தாவை விட சித்தார்த்துக்கு வயது அதிகம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. சமந்தா பெற்றோர் தரப்பிலும் அதிருப்தி இருந்தது. இதுபோல் சித்தார்த் பெற்றோரும் காதலை ஏற்கவில்லை.
இதையடுத்து பெற்றோரை சமரசபடுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர். சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது பெற்றோரை சந்தித்தார். நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். சித்தார்த் உறவினர்களையும் சந்தித்து விட்டு திரும்பினார். நீண்ட யோசனைக்கு பிறகு சித்தார்த் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை உடனடியாக முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்களாம். எனவேதான், சமந்தாவும் புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டாத கூறப்படுகிறது. அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள்.
திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை சித்தார்த் சொல்லி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.