சிங்கம் 2ல் அனுஷ்காவுடன் சந்தானம் டூயட்!

22

சிங்கம் 2 படத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பது குறித்து அனுஷ்காவும், ஹன்சிகாவும் மோதவில்லை என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் சந்தானம் அனுஷ்காவுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளாராம்.

சிங்கம் 2 படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய 2 பேர் நடித்துள்ளனர். இதில் யாருக்கும் அதிக முக்கியத்துவம் என்பது குறித்து அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.
2 நாயகிகள் இருக்கும் இடத்தில் சண்டை வருவது குறித்து படத்தின் இயக்குனர் ஹரியிடமே கேட்டோம்.

மோதல் எதுவும் இல்லை

படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இருவருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்களுக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படவில்லை என்றார் ஹரி.

டூப் போடாமல் நடித்தார் சூர்யா

ஆபத்தான காட்சிகளில் கூட சூர்யா டூப் வேண்டாம் என்று கூறி தானே நடித்தாராம்.

படகில் சேசிங்

கடலில் 40 கிமீ தூரத்தில் மோட்டார் போட்டில் சென்று சூர்யா சேஸ் செய்யும் காட்சி ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைக்கும் என்று அடித்துக் கூறுகிறார் ஹரி.

அனுஷ்கா-சந்தானம் டூயட்

படத்தில் அனுஷ்காவுக்கும், சந்தானத்துக்கும் டூயட் பாடல் ஒன்று உள்ளதாம். சந்தானத்துக்கு வாழ்வு தான்.