கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா? இந்தஎளிய டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்…

35
கூர்மையான அறிவாற்றல்
கூர்மையான அறிவாற்றல்

இந்த உலகம் எப்படிப்பட்டவை என்பதையும்,
அதில் சிறப்பாக எப்படி வாழ முடியும்
என்பதையும் கண்டுபிடிக்க உதவும்
ஒரே கருவி உங்களது மூளை மட்டுமே.
அதனால் அதனை ஆரோக்கியமாக
வைத்திருக்க வேண்டும். உங்கள் அறிவாற்றல்
கூர்மையாக இருந்தால், நீங்கள் கூடுதலாக
சாதிக்கலாம். ஒரு வேளை, சமீப காலமாக
நீங்கள் சில
விஷயங்களை மறந்து போகிறீர்கள்
(மோசமான நினைவாற்றல்) என்றால்
அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்
என்றால், உங்கள் மூளையின்
நலனை எண்ணி நீங்கள் வருத்தப்பட வேண்டிய
நேரம் இது.

உங்கள் புத்தி கூர்மை வளர்வதற்கு உங்கள்
மூளைக்கு சரியான காரணத்தை கொடுக்க
வேண்டும். கண்டிப்பாக அது வளர
ஆரம்பிக்கும். மூளைக்கு சில கடினமான
வேலைகளை நீங்கள் கொடுக்க வேண்டும்.
அது பதிலுக்கு அந்த
வேலையை உங்களுக்கு முடித்து கொடுக்கு
ம். பயன்படுத்தக்கூடிய உண்மையான
சேவகனே உங்கள் மூளை. அதனை பயன்படுத்த
தவறி விட்டால், அதற்கு நீங்கள்
சேவகனாகி விடுவீர்கள். சரி, மூளையைத்
தீட்டுவதற்கான சில
டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம், வாங்க!
மூளை பக்கவாதம் இருந்தால் ஏற்படக்கூடிய
முக்கிய 8 அறிகுறிகள்!!!

புது மனிதர்களை சந்தியுங்கள்
புதிதாக யாரையாவது சந்திக்கும்
போது உள்ளீடுகளை உருவாக்குவதில்,
கோப்புகளை பராமரிப்பதில் மற்றும்
பார்ப்பவரின் விவரத்தை பதிவதில்
உங்கள் மூளை பிஸியாக இருக்கும்.
பல்வேறு பின்னணியிலிருந்து புதிது
புதிதான மனிதர்களை சந்திக்கும்
போது, உங்கள் மூளைக்கு அதிகமாக
வேலை கொடுப்பீர்கள். மூளையின்
வளர்ச்சிக்கு இது நல்லதாகும்.

தியானம் உதவும்
தியானம் செய்வதால் மூளைக்கு சில
பயன்கள் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர். அதனால் உங்கள்
மனது அமைதியாகும். தியானம் மூலம்
புத்துயிர் அளிக்கும் போது, புதிய
ஆற்றல்களை தேர்ந்தெடுக்கும்
நிலையை மூளை அடையும்.

புதிய ஆற்றல்களின் மூலமாக உங்கள்
மூளைக்கு சவாலிடுங்கள்
புதிய ஆற்றல்,
மொழி அல்லது கலையை கற்றுக்
கொள்ளும் போது உங்கள்
மூளைக்கு நீங்கள் சவால் அளிக்கிறீர்கள்.
மூளைக்கு சவால் அளிக்கும் போது,
புதிய நரம்பணுக்களையும்
பாதைகளையும் உருவாக்க
அது வலியுறுத்தப்படும். புதிதாக
கற்பதன் மூலம், மூளையின் அறிவாற்றல்
அளவிற்கு தொடர்ச்சியாக சவால்
விடுவதால் உங்கள் மூளை மிக
கூர்மையாக மாறும்.
புத்தியை கூர்மையாக்கும் டிப்ஸ்களில்
இதுவும் ஒன்றாகும்.

உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன்
இருங்கள்
காதல் இல்லையென்றால் வாழ்க்கை அதன்
அர்த்தத்தை இழந்து விடும். உங்கள்
வாழ்க்கையில் அர்த்தமுள்ள உறவுகள்
இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன்
இருந்தால் உங்கள் மன அழுத்தம் நீங்கும்.
உங்கள்
வாழ்க்கை துணை அல்லது குழந்தைகளுடன்
நீங்கள் செலவழிக்கும் ஒரு நொடியும்
மனதில் பதிந்து கொள்ளும் அழகான
தருணமாகும். ஆரோக்கியமான
உணர்ச்சிகள்
வாழ்க்கைக்கு முக்கியமாகும்.
மூளையை கூர்மையாக்கும் டிப்ஸ்களில்
இதுவும் ஒன்றாகும்.

உடற்பயிற்சிகள்
உங்கள் உடல் சுறுசுறுப்புடன் செயல்பட
வேண்டும் என்றால் உங்கள் மூளையும்
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
எப்போதும் உடற்பயிற்சிகளில் ஈடுபட
வேண்டியது அவசியமாகும். சீரான
முறையில் உடற்பயிற்சியில்
ஈடுபடுங்கள். மூளையை கூர்மையாக்கும்
டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாகும்.

மூளைக்கு தீனி போடா மறந்து விடாதீர்
கள்
மூளைக்கு நல்லது என கருதப்படும்
உணவுகளை அதிகமாக உண்ணுங்கள்.
கூர்மையான
மூளையை பெறுவதற்கு ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.
மூளைக்கு தேவையான ஆரோக்கியமான
உணவுகளை சீரான முறையில் உண்ண
மறந்து விடாதீர்கள். ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு கூர்மையான
மூளைக்கு தேவையான
உணவுகளை கண்டிப்பாக உண்ண வேண்டும்.

போதிய தூக்கம்
தூக்கத்தின் போது உங்கள்
மூளை பிசியாகவே இருக்கும். ஆனால்
அதன் பாகங்களோ தூக்கத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும் ஓய்வு எடுக்க
தொடங்கும். முறையற்ற தூக்க
அமைப்பினால் மூளையின் ஒட்டுமொத்த
செயல்பாடும் பாதிக்கப்படும்.
கூர்மையான
மூளையை பெறுவதற்கு மேற்கூறிய
டிப்ஸ்களை பின்பற்றவும்.