காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?

10

காய்கறிகள்
பழங்கள் மூலமாக இருதய
அடைப்பை நீக்க முடியுமா ? நம்
உடம்பிலுள்ள இரத்த நாளங்களில்
கொழுப்பு படிந்து இருதய
அடைப்பு ஏற்படுகிறது. இந்த
இருதய அடைப்பு மாரடைப்புக்கு
வழிவகுத்து இறுதியில்
மரணத்தின் பிடியில்
கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க
முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும்
இருதய அடைப்பு என்ற
அபாயத்திலிருந்து
தப்பித்துவிடலாம்.
காரட்:
தினமும் காரட்டை அதிக அளவில்
சேர்த்துக் கொண்டால் (பச்சையாக)
இரத்தத்தின் கொலஸ்ட்ரால்
அளவு குறைகிறது. நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு:
மாரடைப்பு நோய் வரும்
வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:
ஃபோலிக் ஆசிட், இரும்புச்
சத்து பீட்ரூட்டில் உள்ளதால்
தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை
நோய் வருவதில்லை. இரத்தக்
குழாய்களில் படியும்
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி:
கணுக்கள் சிறிதாக உள்ள
இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள்.
இஞ்சி இரத்தக் குழாய்களில்
ஏற்படும் இரத்த உறைவைத்
தடுத்து மாரடைப்பு வராமல்
பாதுகாக்கிறது. இரத்த
ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத்
தொல்லையைப் போக்குகிறது.
மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்:
வெங்காயத்தைத்
தொடர்ந்து உண்டு வந்தால்
இரத்தத்தின் கொலஸ்ட்ரால்
அளவு குறைவதோடு இரத்தத்தின்
உறை தன்மையும், ஒட்டும்
தன்மையும் குறைவதால்
மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள்
வராமல் தடுக்கும்
சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று
பல ஆராய்ச்சிகள் மூலம்
தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில்
அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு
வந்தவர்களும் கூட தினமும் 100
கிராம் வெங்காயத்தைத்
தொடர்ந்து உண்டு வந்தால்
படிப்படியாக இருதய ரத்த
நாளங்களில் உள்ள அடைப்புகள்
கரைந்து மறைந்துவிடுவதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்:
இதில் உள்ள `பெக்டின்� என்ற
நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால்
அளவைக் குறைப்பது ஆய்வுகளின்
மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம்
உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள்
பழங்களைத்
தொடர்ந்து மூன்று மாதங்கள்
சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால்
அளவு 10லிருந்து 15 சதவிகிதம்
வரை குறைந்துவிடுகிறது.
ஆப்பிள் பழத்தில் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி:
இரத்தக் குழாய்களில் ஏற்படும்
அடைப்பை நீக்குவதில்
அன்னாசி சிறந்து விளங்குகிறது.
மேலும், அன்னாசிப்
பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால்
இரத்தத்தில் உறையும்
தன்மை குறைவதோடு, இரத்தக்
குழாய்களில் உள்ள அடைப்புகளும்
நீங்கும்.
எலுமிச்சம்பழம்:
உடம்பிலுள்ள சிறிய இரத்தக்
குழாய்களின்
சுவர்களை எலுமிச்சையில் உள்ள
சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு
சிறுநீரகங்களில் இரத்த
ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.
எலுமிச்சையில் `பெக்டின்�
சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள
கொலஸ்ட்ரால் அளவைக்
குறைக்கிறது.
பூண்டு:
இதில் ‘சாலிசிலிக்’ என்ற இரசாயனப்
பொருள் உள்ளது. நாம் சாப்பிடும்
உணவின் மூலம் இரத்தக்
குழாய்களில் அதிக
அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை
உண்டாக்கும் போது பூண்டிலுள்ள
`சாலிசிலிக்� என்ற சத்து அந்த
அடைப்பை உடைத்துவிடுகிறது.
தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.
சுரைக்காய்:
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள
அடைப்பை நீக்குவதில் சுரைக்காய்
பலே கில்லாடி! சுரைக்காய்
சாற்றை வெறும் வயிற்றில் 200
மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம்
குடித்து வந்தால் இரத்தக்
குழாய்களில் படிந்துள்ள
அடைப்புகள்
தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்:
இயற்கை அன்னை நமக்கு நல்கிய
அற்புதமான காய். இரத்தத்திலுள்ள
யூரிக் ஆசிட்டைக் கணிசமாக
குறைத்து, இதயத்தின்
செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக
இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில்
ஏற்படும் அடைப்பை நீக்குவதில்
இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி:
இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக்
குழாய்களின் அடைப்பைப்
போக்கி இரத்த ஓட்டத்தைச்
சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக்
காய்களைத் தினசரி காலையில்
பச்சையாகச் சாப்பிட்டு வந்தால்
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள
அடைப்புகள் மூன்றே மாதங்களில்
80 சதவிகிதம்
ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால்
தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும்
நிறையச் சாப்பிட்டு இரத்தக்
குழாய்களில் படிந்துள்ள
அடைப்புகளைப்
போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத
வண்ணம் இன்புற்று வாழலாம்.