காமெடி நடிகருடன் ஸ்ருதிஹாசன் போடும் குத்தாட்டம் – வீடியோ வெளியானதால் பரபரப்பு

16
தெலுங்கு பட காமெடி நடிகர் பிரம்மானந்தம் உடன் குத்தாட்டம் ஆடியுள்ளார் ஸ்ருதிஹாசன். பலுபு படத்திற்காக ஆடிய இந்த ஆட்டத்தை படக்குழுவினர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவிவருகின்றது. பலுபு படத்தில் ஸ்ருதிஹாசன் ரவிதேஜாவிற்கு ஜோடியாகத்தான் நடிக்கிறார். ஆனால் காமெடி நடிகருடன் எப்படி குத்தாட்டம் ஆடுகிறார் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
ரவிதேஜாவின் கேரியரில் மிக முக்கியமாக கருதப்படும் பலுபு படத்தில் திடீரென இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அவர் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.