காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்!

20

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது. எனக்கும் ஊட்டிக்குப்போய் டூயட் பாடனும்னு ஆசை இருக்காதா என்று சொல்லி, அப்பட நாயகி விசாகா சிங்குக்கு தானும் லவ் லட்டர் கொடுத்தார் சந்தானம்.
அது படத்துக்காக பேசிய டயலாக் என்றாலும, சந்தானத்துக்குள்ளும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக அதையடுத்து தான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும் தனக்கொரு ஜோடி நடிகையை இணைத்து வருகிறார்.
குறிப்பாக, யா யா என்ற படத்தில் காதல் சந்தியாவை தனது ஜோடியாக்கியுள்ளார். ஒரு காலத்தில் பரத், ப்ருதிவிராஜ் போன்ற நடிகர்களுடன் டூயட் பாடிவந்த சந்தியாவுக்கு இப்போது சினிமாவில் மார்க்கெட் அச்சு கழண்டு கிடப்பதால், சந்தானம் கிடைப்பதே பெரிய விசயம் என்று இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காமெடி கதாநாயகியாக ஆக்டு கொடுத்திருக்கிறார்.
இருவரும் ஹீரோ ஹீரோயினி போன்றே காதல் செய்வதோடு, அவர்களுக்கு பிட் பாடல்களும் உள்ளதாம்.
அதுமட்டுமின்றி, ஹீரோக்கள் ரேஞ்சுக்கு சந்தியாவுக்கு முத்தம் கொடுப்பது, இடுப்பை கிள்ளி விடுவது என்ற சில்மிஷ விளையாட்டுகளையும் செய்துள்ளாராம் சந்தானம்.
இதனால் இதே படத்தில் நடித்துள்ள சிவா, தன்சிகா போன்றே சந்தானம்- சந்தியாவின் காதல் லீலைகளும் கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். ஆக, சமீபகாலமாக தனக்குள்ளிருக்கும் கதாநாயகன் தாகத்தை இப்படி தணித்துக்கொண்டு வருகிறார் சந்தானம்.