ஏதோ ஓர் மனிதம்

19
அன்பின் உருவம்
அன்பின் உருவம்

ஐனனம்

அலறல் சத்தம் கேட்டு
மந்திகை ஆசுப்பத்திரி
ஸ்தம்பித்துப் போனது
தங்கத்துக்கொரு தங்கம்
பிறந்ததென்று
ஊருக்குள் காட்டுத்தீ பரவியது
ஆறு பெட்டைக்கொரு பெடியனெண்டு
அம்மா கர்வமாய்ச் சிரிப்பது
என் காதுகளிலேயே கேட்டது

ஞானம்

அம்மன் கோயில் பூசாரி
கைபிடித்து அரிசிக்குள்ள
ஆனா எழுதிவச்சு
பக்கத்து வீட்டக்கா மண்டையில குட்டி
ஆவன்னா போட்டுவச்சு
வந்த தமிழும்
கிறுக்கி வச்ச கவிதைகளும்
பாடையில போனாலும் சாகாது