இறப்பில் உயிர்க்கும் பண்பாடும் உறவுகளும்

25

இறப்பிற்கும் வாழும் உறவிற்குமான
பண்பாட்டு உறவு என்பது,
இறந்தவருக்கு எழுதப்படும்
சரமகவிகள், இரங்கல் உரைகள்,
எழுப்பப்படும் நினைவகங்கள்,
முதலியவற்றில் உயிர்க்கிறது.
இறந்தவர்கள் முடிவுரையில்
உயிர்க்கும் உறவுகள் பண்பட்ட
மனிதத்தின் மரபு. இந்நாளிலும்
சரி, இறப்பிற்கும் வாழும்
மனிதவழி
விழுமியங்களுக்குமுள்ள
தொடர்பு எந்த விதத்திலும்
குறைந்ததாகத் தெரியவில்லை.
இறுதி ஊர்வலங்கள்,
அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய
நடவடிக்கைகள், உறவுகளால்
செய்யப்பெறும் மரியாதைகள் உள்பட
பல அதனுடன் தொடர்புபடுகின்றன.
உறவு முறைகள்
தாய் தந்தை உடன் பிறப்புகள்
உறவு முறையில் தாய்,
தந்தையரை அடுத்து முக்கியமான
உறவு என்றால்,
உடன்பிறப்புக்கள்தான். அதிலும்
அக்கா-
தங்கை உறவு இறுதி வரை கூடவே
வந்து கொண்டிருக்கும்.
ஓடோடி வருவார்கள். அதைத்தான்
“தானாடா விட்டாலும், தன்
தசை ஆடும்”
என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
தாய்மாமன் உறவு
திருமணம்,
காது குத்து தொடங்கி இறப்பு வரை
குடும்பத்தின்
ஒவ்வொரு நிகழ்விலும்
கூடவே வருவது தாய்மாமன்தான்.
அதற்கு தமிழ்ச் சமூகம்
கொடுத்து வைத்திருக்கும்
மதிப்பும், மரியாதையும்
மிகப்பெரியது.
எல்லோருமே “மாமன்”
என்று சொல்லிக்
கொண்டிருக்கிறோம். உண்மையில்
“அம்மான்” என்பதுதான் சரியான
பதம். அதாவது, அம்மாவுடன்
பிறந்தவன் என்பதைக் குறிக்கும்
வகையிலான சொல் அது.
அத்தை
அத்தனின் தங்கை… “அத்தை”
என்கிறது இலக்கியம்.
ஒரு காலத்தில் அப்பாவை, “அத்தன்”
என்றுதான் அழைத்தார்களாம்
(இப்போதுகூட முஸ்லிம் மதத்தினர்
“அத்தா” என்று அழைக்கின்றனர்).
தாய்மாமன்
அளவுக்கு இல்லாவிட்டாலும்…
இதுவும் இறுதி வரைகூடவே வரும்
உறவுதான்.
பங்காளி உறவு
தந்தை வழியில் பெரியப்பா,
சித்தப்பா வீட்டு ஆண்
பிள்ளைகளுடன்
ஒற்றுமை பாராட்டுவதுதான்
பங்காளி உறவு. பிரச்னைகளிலும்,
குடும்ப விழாக்களிலும் முதல்
ஆளாக நின்று தோள் கொடுப்பார்கள்
இவர்கள். “நான் தனி ஆள் இல்லை.
எந்தச் சூழ்நிலையிலும்
எனக்கு உதவ ஆள் இருக்கிறார்கள்”
என்பதை ஊருக்கு உணர்த்திக்
கொண்டே இருக்கும் உறவு இது.
பேரன்/பேத்தி
அப்பா/அம்மா, பாட்டன்/பாட்டி,
பூட்டன்/பூட்டி, ஓட்டன்/
ஓட்டி என்று ஐந்து தலைமுறைகள்
கடப்பதற்குள்ளேயே 200 ஆண்டுகள்
வந்துவிடும் என்பதால்,
அதற்கு மேலான உறவுகளைப்
பற்றி பேசுவதற்கே வாய்ப்பிருக்காது.
பெரும்பாலானவர்களுக்கு பூட்டன்/
பூட்டி பெயர்
தெரிந்திருப்பதே அபூர்வம்.
குழந்தைகளுக்கு பாட்டன்/
பாட்டி பெயர்களைத்தான்
வைப்பார்கள் அந்தக் காலத்தில்.
பாட்டன்/பாட்டியின் பெயர் சொல்ல
வந்த பிள்ளைகள்
என்பதற்காகவே ‘பெயரன்-பெயர்த்தி’
என்று உறவு முறையில்
சொல்லப்பட்டு, அதுவே பேரன்,
பேத்தி என்றாகிவிட்டது.
மரணத்தில் மரியாதை
ஒரு அறிஞர் இப்படிச் சொன்னார்,
“தனது சொந்தத்தின்
மரணத்தை ஒரு மனிதன்
எப்படி மதிக்கிறான், அதற்குரிய
மரியாதையை அவன்
எப்படி செலுத்துகிறான்
என்று எனக்குச் சொல்லுங்கள், அவன்
குடும்பத்தின் பண்பாட்டையும்,
கலாச்சாரப் பெருமைகளையும் நான்
உங்களுக்குச் சொல்கிறேன்” என்று.
மரணம் ஒரு நிகழ்வு அல்ல,
மறுபடியும் ஒத்திகை பார்க்க
அல்லது ஒரு இறப்பில்
அனாதையாக்கிப் பின்னர்
மறு இறப்பில் திருத்திக்கொள்ள.
வாழும் காலத்தில், உறவுகள்
தீகொண்டு தூற்றினும், மரணத்தில்
மறந்தணைத்து, இறுதிக்
கடமை செய்ய வேண்டுதல், மரணித்த
ஒவ்வொருவரினதும் எழுதப்படாத
மரணசாசனம்.