இயற்கையான அழகு குறிப்புகள்

44

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது.. ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான். இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.. இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

இயற்கையான அழகு குறிப்புகள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்:
முதலில் நகம்.
நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம். காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

நகத்தைப் பராமரிக்க:
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

இதழ்களை பராமரிக்க:
நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும். உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும். பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.

முகத்தைப் பராமரிக்க:
உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான். நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி. இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் “பளிச் பளிச்” போங்க..!

கழுத்தை பராமரிக்க:
நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும். சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க:
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

கருவளையம் நீங்க:
கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க:
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும். Nature cleanser (இயற்கை கிளென்சர்) நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும். இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம். எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம். வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

முகப்பரு போக்க:
முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும். இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.

முகம் பொலிவு பெற:
ஒரு Hi-tech இயற்கை மருத்துவ முறை: பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்… முகம் பளிச் பளிச்தான் போங்க…!! மற்றொரு இயற்கையான எளிய முறை: கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா…? காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

முகச்சுருக்கம் போக்க:
ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள். காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம். இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.
மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.. நீங்களும் உலக அழகிதான்…!!! உலக அழகன்கள்தான்…!!!