ஆண்கள் எப்போதும் தங்கள் வலிகளை வெளிப்படுத்தமாட்டாங்க…

12

அனைவருக்குமே பெண்களை விட
ஆண்கள் சற்று வலிமையானவர்கள்
என்பது தெரியும். ஏனெனில்
ஆண்கள் எதையுமே தைரியமாக, மன
வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும்
தன்மையுடையவர்கள். ஆனால்
பெண்கள், தங்கள்
வலிகளை கோபத்தின்
வாயிலாகவோ அல்லது அழுதோ
வெளிப்படுத்திவிடுவார்கள்.
அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும்
வலிகளை ஒரு போதும் எளிதில்
வெளிப்படுத்த மாட்டார்கள்.
அதிலும் கஷ்டம் மனதில்
இருந்தாலும் ஆண்கள்
அழுது வெளிப்படுத்துவது மிகவும்
அரிதானது.
முதலில் ஆண்கள் மனதளவில்
மிகவும் வலிமையானவர்கள்
என்பது ஏற்கனவே ஆய்வில்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன்
பல்கலைகழகத்தில், பெண்களை விட
ஆண்கள் அதிக அளவில்
வலியை பொறுத்துக் கொள்வார்கள்
என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்படியெனில்
ஆண்களுக்கு ஈகோ மிகவும்
அதிகம். அதனால் தான் அவர்கள்
தங்களுக்கு ஏற்படும்
வலிகளை ஏற்றக் கொள்ள
முடிகிறது. இதனால்
அவர்களது உணர்ச்சி
கட்டுப்படுத்தப்படுவதோடு,
பலமடைகிறது. ஆகவே தான்
ஆண்கள் எந்த
ஒரு பிரச்சனை வந்தாலும், மன
தைரியத்துடன், மனதை அந்த
கஷ்டத்தினால் தளர விடாமல்,
போராட முடிகிறது. ஆனால்
அவர்கள் வருத்தத்தில் இருக்கும்
போது,
அவர்களது நடவடிக்கையை வைத்து
அவர்கள் மனதில்
வலி உள்ளது என்பதை தெரிந்து
கொள்ளலாம்.
உதாரணமாக, கணவன்
மனைவியை எடுத்துக் கொள்வோம்.
அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டால்
, அதனால் பெண்கள் தங்கள்
வலியை அழுது
வெளிப்படுத்திவிடுவார்கள்.
ஆனால் ஆண்கள் அந்த நேரத்தில்
எதுவும் செய்யாமல், பேசாமல்
அமைதியாக யாரிடமும் பேசாமல்,
தனிமையிலேயே இருப்பர்.
வேண்டுமெனில் சில சமயங்களில்
தன்னுடைய நெருங்கிய நண்பரிடம்
பேசி, தன் மனதை ஆற்றிக்
கொள்வார்கள்.
எப்படியெல்லாம் ஆண்கள் தங்கள்
வலியை மறைப்பார்கள்?
* யாரிடமும் எந்த
ஒரு உரையாடலையும்
மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது,
ஆண்களிடம்
அவர்களுக்கு வலியை ஏற்படுத்திய
விஷயத்தைப் பற்றி கேட்டால்,
அப்போது ஒரு வார்த்தையில்
பதிலளிப்பர் அல்லது அந்த
டாபிக்கையே மாற்றிவிடுவர்.
இதை வைத்து அவர்கள் மனதில்
வலி இருப்பதை மறைக்கிறார்கள்
என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* சில ஆண்கள் வலியை மறக்க,
எப்போதுமே நண்பர்களுடன் இருப்பர்.
ஏனெனில்
தனிமை அவர்களுக்கு பெரும்
வலியை ஏற்படுத்தும் என்று எந்த
நேரமும் நண்பர்களுடன் இருந்து,
வலியை ஏற்படுத்திய விஷயத்தைப்
பற்றி நினைக்காமல் இருக்க
முயற்சிப்பர்.
* ஆண்களின் ஈகோ மிகவும்
வலிமையானது. அந்த ஈகோ தான்
அவர்களது வலியை தாங்கிக்
கொள்ள வைக்கிறது. மேலும் இந்த
ஈகோ மற்றவர்களிடம் எதையும்
பகிர்ந்து கொள்ள விடாமல்
தடுக்கும். அதிலும் ஆண்கள் தங்கள்
வலியை மற்றவர்களுக்கு காண்பித்து,
அதனால் மற்றவர்கள் தங்கள்
மீது கருணை கொள்வதை விரும்ப
மாட்டார்கள்.
* ஆண்களுள் சிலர்
தங்களுக்கு இருக்கும் ஈகோவின்
அளவை அதிகரிப்பார்கள். இதனால்
அவர்கள் எந்த வலியையும் எளிதில்
தாங்கிக் கொள்ள முடியும்.