அமெரிக்காவில் விஸ்வரூபம் 2

33

விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளேன் என்று உலகநாயகன் கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் நேரடியாக டெலிவிஷன்களில் ஒளிபரப்ப ஏற்கனவே திட்டமிட்டார்.

இதற்காக பொது மக்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் திரையரங்கு அதிபர்கள் எதிர்த்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது விஸ்வரூபம் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கமலஹாசன் இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படத்தையாவது 3 மொழிகளிலும் டி.டி.எச் மூலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியொன்றில் கமல் கலந்துகொண்டு பேசுகையில், திரைப்படங்களை டி.டி.எச் மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்புவது எதிர்காலத்துக்கு அதை எடுத்துச் செல்வது ஆகும்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அதற்கு தகுந்த கட்டணம் வசூலிக்கப்படும். தொலைக்காட்சி மூலம் வீட்டில் மட்டும் மக்கள் பார்க்கும் நிலைமை இருக்காது. திரையரங்குகளிலும் படம் திரையிடப்படும். ஆனாலும் இந்த முறையை எதிர்க்கிறார்கள்.

விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளேன்.

இந்தியாவில் அதை அனுமதிக்காவிட்டால் அமெரிக்காவில் டி.டி.எச்.களில் ஒளிபரப்பு செய்வேன் என்று கூறியுள்ளார்.